செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Murugan
Last Modified: புதன், 7 அக்டோபர் 2015 (19:27 IST)

வேலைக்காரியுடன் ஜல்சா செய்த கணவனை வீடியோ எடுத்த மனைவிக்கு சிறை தண்டனை

சவுதி அரேபியாவில் தன்னுடைய கணவன் வேலைக்காரியோடு நெருக்கமாக இருந்ததை வீடியோ எடுத்த பெண்ணிற்கு சிறை தண்டனை கிடைக்கவுள்ளது.


 

 
சவுதி அரேபியாவில் தன் கணவனின் செயல்பாடுகளில் சந்தேகமடைந்த, அவரின் மனைவி, அவருக்கு தெரியாமல் மொபைல் போனை அவருடைய அறையில் வைத்துள்ளார்.
 
அதில், அவரின் கணவர், அவர்களது வீட்டில் பணிபுரியும் வேலைக்காரிக்கு முத்தம் கொடுக்கும் காட்சி பதிவாகியிருந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண் அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தார். மேலும் இதன் மூலம் தன் கணவனுக்கு தக்க தண்டனை கிடைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
 
ஆனால், சவுதி அரேபிய சட்டப்படி, ஒருவரை மற்றொருவர் அவமானப் படுத்துடும் வகையில் புகைப்படமோ அல்லது வீடியோவோ எடுக்கக்கூடாது. அப்படி எடுத்தால் ஒரு ஆண்டு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.
 
ஆனால் சவுதி அரேபிய மக்கள், அந்தப் பெண் செய்தது சரிதான் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.