திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 16 ஜனவரி 2020 (11:06 IST)

லெஸ்பியன்களே அதிகம்! ஓரினச்சேர்க்கை திருமணங்களில் விவாகரத்து !

நெதர்லாந்து நாட்டில் அதிக அளவில் லெஸ்பியன்களே விவாகரத்து செய்வதாகப் புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன.

நெதர்லாந்து நாட்டில் 2001 ஆம் ஆண்டு முதல் ஓரினச்சேர்க்கை திருமணங்கள் அங்கீகரிக்கப்பட்டன. இதை முன்னிட்டு முதல் சில வருடங்களில் ஆண் ஓரினச்சேர்க்கையாளர்கள் அதிகமாக திருமணங்கள் செய்து கொண்டனர். ஆனால் அதன் பின் பெண் ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணம் அதிகமானது.

ஆண் பெண் திருமணத்தில்  விவாகரத்துகள் நடப்பது போலவே ஓரினச்சேர்க்கை திருமணங்களிலும் விவாகரத்துகள் அதிகமாகி வருகின்றன. அதிலும் பெண் ஓரினச்சேர்க்கைத் திருமணங்கள் ஆண்களை விட அதிகளவில் விவாகரத்தில் முடிகின்றன.

100 ஓரினச்சேர்க்கைத் திருமணங்களில் 18 திருமணங்கள் விவாகரத்தில் முடிகின்றன. இந்த விவாகரத்துகளில் முதன்மைக் காரணமாக அதிக வயது வித்தியாசத்தில் திருமணம் செய்துகொள்ளுதே முக்கியப் பங்கு வகிக்கிறது.