வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 5 ஜூலை 2020 (12:14 IST)

அமெரிக்க அதிபர் தேர்தலில் நடிகையின் கணவர் போட்டியா? பரபரப்பு தகவல்

அமெரிக்க அதிபர் தேர்தலில் நடிகையின் கணவர் போட்டியா?
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3-ம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் மீண்டும் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான பிரச்சாரத்தை அவர் ஏற்கனவே ஆரம்பித்து விட்டதாகவும் விரைவில் அவர் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவார் என்றும் கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் தனது ஜோ பைடன் என்பவர் டிரம்பை எதிர்த்து எதிர்க்கட்சி வேட்பாளராக போட்டியிட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இம்முறை அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் தேர்வு செய்யப்படுவது கடினம் என்றே பரவலாக கருத்துகள் எழுந்திருக்கின்றன 
 
இந்த நிலையில் திடீரென நடிகையும் மாடலுமான கிம் கர்தர்ஷியான் கணவர் கென்யா வெஸ்ட் என்பவரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். இந்த கருத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கிம் கர்தர்ஷியானுக்கும் ஏற்கனவே அமெரிக்காவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர் அதேபோல் கென்யா வெஸ்ட் பிரபல பாடகர் பாடலாசிரியர் இசையமைப்பாளர் என்பதால் அவருக்கும் மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது.  எனவே கிம் கர்தர்ஷியான் கணவர் கென்யா வெஸ்ட் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டால் அதிபர் டிரம்புக்கு கடும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இருப்பினும் இந்த தேர்தலில் போட்டியிடுவதை கென்யா வெஸ்ட் இன்னும் உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது