திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 12 ஆகஸ்ட் 2024 (10:12 IST)

மிஸஸ் கனடா எர்த் போட்டியில் கேரள பெண்ணுக்கு பட்டம்.. குவியும் வாழ்த்துக்கள்..!

கனடாவில் நடந்த மிஸஸ் எர்த் அழகிப்போட்டியில் கேரளாவை சேர்ந்த பெண்ணுக்கு பட்டம் கிடைத்துள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

கனடாவில் சமீபத்தில் எர்த் கனடா எர்த் போட்டி நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து இந்த போட்டியில் கனடாவில் வாழும் பலர் கலந்து கொண்டனர் என்பதும் அதில் கேரள மாநிலம் கண்ணூர் பகுதியைச் சேர்ந்த மிலி என்ற பெண்ணும் கலந்து கொண்டார்
கனடாவில் பொறியாளர் பணி செய்யும் மிலி, தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வரும் நிலையில் ஏற்கனவே கனடா மலையாளி பெண்களின் அழகி போட்டியில் கலந்து கொண்டு முதல் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தான் மிகவும் நம்பிக்கையுடன் மிஸஸ் கனடா எர்த் என்ற அழகிப் போட்டியில் பங்கேற்ற இவருக்கு முதல் இடம் கிடைத்து டைட்டில் பட்டமும் கிடைத்துள்ளது. இதனை அடுத்து மிலிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இந்த போட்டியில் 52 பேர் பங்கேற்ற நிலையில் மிலி முதலிடம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. கனடா மலையாள பெண்கள் அழகிப்போட்டி மற்றும் மிஸஸ் எர்த் அழகி போட்டி என அடுத்தடுத்து பட்டங்கள் வென்றதை அடுத்து இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Edited by Mahendran