ஞாயிறு, 10 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 13 செப்டம்பர் 2024 (10:56 IST)

கமலா ஹாரிஸ் அழைப்பை நிராகரித்த டிரம்ப்! மீண்டும் விவாதம் செய்ய பயமா?

அமெரிக்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகிய இருவரும் சமீபத்தில் நேரடி விவாதம் செய்த நிலையில் மீண்டும் விவாதம் செய்ய கமலா ஹாரிஸ் அழைப்பு விடுத்ததாகவும் ஆனால் அந்த அழைப்பை டிரம்ப் நிராகரித்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. 
 
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகிய இருவரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகிய இருவரும் நேரடியாக விவாதம் செய்த நிலையில் இந்த விவாதத்தில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றதாக செய்திகள் வெளியாகின. 
 
இந்த நிலையில் மீண்டும் விவாதம் செய்ய கமலா ஹாரிஸ் அழைப்பு விடுத்த நிலையில் அந்த அழைப்பை டிரம்ப் நிராகரித்து விட்டதாகவும் மீண்டும் ஒருமுறை கமலாவுடன் விவாதம் செய்ய விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
ஒருவர் சண்டையில் தோற்றால் அவர் வாயில் இருந்து வரும் முதல் வார்த்தை எனக்கு இன்னொரு போட்டி வேண்டும் என்பதுதான். அதைப்போல கமலா முதல் விவாதத்தில் தோல்வி அடைந்த நிலையில் உடனடியாக அடுத்த விவாதத்திற்கு அழைப்பு கொடுத்துள்ளார்.
 
கமலா ஹாரிஸ் மற்றும் ஜோபைடன் ஆகிய இருவரும் நாட்டை அழித்துவிட்டனர். இது அனைவருக்கும் தெரியும். கடந்த 4 ஆண்டுகள் அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை கமலா பொதுவெளியில் கூற வேண்டும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran