வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Arun Prasath
Last Updated : திங்கள், 11 நவம்பர் 2019 (19:46 IST)

யூதர்களின் கல்லறைகளில் பெயிண்ட்டால் கிறுக்கிய மர்ம நபர்கள்..

டென்மார்க்கில் உள்ள யூதர்களின் கல்லறைகளில் மர்ம நபர்களால் பெயிண்டால் கிறுக்கி சேதப்படுத்தப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளன.

டென்மார்க் நாட்டில் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ராண்டர்ஸ் என்னும் பகுதியில் 6000 யூதர்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் ஓஸ்ட்ரே கிர்கேகார்டு என்னும் ஒரு யூத கல்லறை தோட்டம் உள்ளது.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை, கல்லறை தோட்டத்தில் உள்ள 80 க்கும் மேற்பட்ட யூத கல்லறைகளை மர்ம நபர்கள் பச்சை நிற பெயிண்ட்டால் கிறுக்கியும், சேதப்படுத்தியும் உள்ளதாக போலீஸாரில் புகார் அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து கல்லறையை பார்வையிட்ட போலீஸார், கல்லறைகளை சேதப்படுத்திய மர்ம நபர்களை பிடிக்க விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.
இது குறித்து காவல் துறையை சேர்ந்த போ கிரிஷ்டன்சன், ”கல்லறை கற்களின் மீது குறியீடுகளோ அல்லது எழுத்துகளோ எதுவும் இல்லை, ஆனால் ஆங்காங்கே பெயிண்ட்டால் கிறுக்கப்பட்டுள்ளது” என கூறியுள்ளார்.