ஹமாஸ் படையினர் என நினைத்து பிணைக்கைதிகளை கொன்ற இஸ்ரேல்! – பிரதமர் நேதன்யாகு வேதனை!
இஸ்ரேல் – பாலஸ்தீன ஆதரவு ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் நடந்து வரும் நிலையில் ஹமாஸ் படையினர் என நினைத்து சொந்த மக்களையே சுட்டுக் கொன்றுள்ளது இஸ்ரேல் ராணுவம்.
கடந்த 2 மாத காலமாக இஸ்ரேல் – பாலஸ்தீன ஆதரவு அமைப்பான ஹமாஸ் இடையே போர் நடந்து வருகிறது. இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை வீசி தாக்கிய ஹமாஸ் அமைப்பு, பல இஸ்ரேல் மக்களை பணையக்கைதிகளாக பிடித்து சென்றது. இதனால் ஹமாஸ் ஆக்கிரமிப்பு பகுதியான காசாவிற்குள் நுழைந்துள்ள இஸ்ரேல் ராணுவம் வான்வழி, தரைவழி தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகிறது.
சமீபத்தில் தற்காலிக போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு இருதரப்பிலும் சில கைதிகள் விடுவிக்கப்பட்டனர். பின்னர் மீண்டும் போர் தொடங்கி நடந்து வரும் நிலையில் காசாவில் புகுந்த இஸ்ரேல் ராணுவத்தினர் அங்கிருந்த பணையக்கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் என நினைத்து 3 பேரை சுட்டுக் கொன்றுள்ளனர்.
பணையக்கைதிகளை மீட்க சென்ற ராணுவம் அவர்களையே தவறுதலாக சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தவறுதலாக நடந்த இந்த அசம்பாவிதம் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு வருத்தம் தெரிவித்துள்ளார்.
Edit by Prasanth.K