1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 19 மே 2024 (21:25 IST)

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் ஜோல்பா என்ற இடத்தில்  விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தெஹ்ரானில் இருந்து கிட்டத்தட்ட 600 கி.மீ. தூரத்தில் கிழக்கு அஜர்பைஜானில் உள்ள ஜோல்ஃபாவில் விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
ஈரான் அதிபருடன் அந்நாட்டு அமைச்சர் உசேன் உள்ளிட்டோர் ஹெலிகாப்டரில் பயணித்ததாக ஈரான் நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் அதிபரின் கான்வாயில் சென்ற 2 ஹெலிகாப்டர்களில் பயணித்த 2 அமைச்சர்கள், அதிகாரிகள் பத்திரமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இந்நிலையில் விபத்து நடந்த இடத்திற்கு மீட்புப்படையினர் விரைந்துள்ளதாகவும், ஆனால் மோசமான வானிலையால், விபத்து நடந்த இடத்திற்கு மீட்புப்படையினர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
இந்நிலையில்  டிரோன்கள் மூலம் மீட்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக ஈரான் நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி நிலைமை என்னவென்று இதுவரை தகவல் இல்லை.
 
Edited by Siva