புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 5 ஜூன் 2018 (18:04 IST)

அணுசக்தி தயாரிக்க முழுவீச்சில் ஈரான்; யுரேனியத்தை செறுவூட்ட ஈரான் முடிவு

ஈரான் அணுசக்திக்கு தேவையான யூரேனியத்தை செறிவூட்டும் நிலையத்தை செயல்படுத்தி அதிகமான உற்பத்தியை தொடங்க உள்ளது.

 
எண்ணை வளமிக்க நாடுகளில் ஒன்றான ஈரான், முதன்மை நாடுகளான அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், சீனா, ரஷ்யா மற்றும் ஜெர்மனி ஆகியவைகளுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் அணுசக்திக்கு தேவையான யுரேனியம் செறிவூட்டும் விவகாரம் தீவிரமாக ஆராயப்பட்டது. 
 
இதில் யுரேனியம் செறிவூட்டலை 20% அளவுக்கு கீழ் மட்டுப்படுத்த வலியுறுத்தப்பட்டது. ஆனால் இது ஈரான் மக்களுடைய உரிமை என்று கூறப்பட்டது. இந்த அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகிய பின்னர் ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதிக்க அமெரிக்கா பரிந்துரைந்தது.
 
இந்நிலையில் யுரேனியத்தை செறிவூட்டும் நிலையத்தை செயல்படுத்தி அதிகமான உற்பத்தியை தொடங்க உள்ளதாக சர்வதேச முதன்மை நாடுகளிடம் ஈரான் தெரிவித்துள்ளது.