1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 1 நவம்பர் 2022 (08:33 IST)

வாட்ஸ் அப்-ஐ அடுத்து இன்ஸ்டாகிராமில் தொழில்நுட்ப கோளாறு: பயனர்கள் அவதி

Instagram
கடந்த சில நாட்களுக்கு முன்னர் வாட்ஸ்அப் திடீரென தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கியதால் பயனர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர் என்பதை பார்த்தோம்
 
இந்த நிலையில் தற்போது உலகம் முழுவதும் பலருடைய இன்ஸ்டாகிராம் பக்கங்கள் திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
உலகெங்குமுள்ள இன்ஸ்டாகிராம் பக்கங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக பயனர்கள் தஙக்ள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். தங்களுடைய இன்ஸ்டாகிராம் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு என்ன காரணம் என்று புரியாத பலரும் டுவிட்டரில் ஹேஷ்டேக் மூலம் பதிவு செய்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி இன்ஸ்டாகிராம் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு விட்டதாகவும் தற்போது இன்ஸ்டாகிராம் வழக்கம்போல் இயங்கி வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
 பயனர்கள் பலரும் தங்கள் கணக்குகள் தற்காலிகமாக  சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக வந்த செய்தியை அடுத்து இன்ஸ்டாகிராம் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த விளக்கத்தை அளித்துள்ளது என்பது குறிப்பிடப்பட்டது
 
Edited by Siva