காங்கோ நாட்டில் இந்தியர்கள் மீது தாக்குதல்; கடைகள் உடைப்பு
டெல்லியில் காங்கோ நாட்டை சேர்ந்த வாலிபர் ஒருவர் கொல்லப்பட்டதால், அந்த நாட்டில் உள்ள இந்தியர்கள் மீது அந்நாட்டினர் தக்குதல் நடத்தி வருகின்றனர், இதனால் அங்குள்ள இந்தியர்கள் மத்தியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
டெல்லியில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்த காங்கோ நாட்டை சேர்ந்த ஒலிவியா என்ற இளைஞர் அப்பகுதியில் உள்ள நபர்களுடன் ஏற்பட்ட மோதலால், 3 பேர் கொண்ட கும்பலால் கொல்லப்பட்டார். கொல்லப்பட்ட ஒலிவியாவுக்கு வயது 23 ஆகும். காவல் துறையினர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தங்கள் நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் இந்தியாவில் கொல்லப்பட்டதால் ஆத்திரமடைந்த காங்கோ நாட்டினர் அங்கு வாழும் இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர் மேலும் இந்தியர்களின் கடைகளையும் அடித்து நொறுக்கியுள்ளனர். இதனால் அங்கு வாழும் இந்தியர்கள் மத்தியில் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவி வருகிறது.
இதற்கு முன்னர் 2013-இல் பஞ்சாப்பில் 24 கருப்பு ஆப்பிரிக்க மாணவர்கள் கைது செய்யப்பட்ட போது காங்கோவில் உள்ள இந்தியர்கள் மீதும் அவர்கள் கடைகளின் மீதும் தக்குதல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.