வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 10 மே 2020 (10:21 IST)

நான் வெச்சதுதான் ரேட்டு; இஷ்டம்னா வாங்கு! – அமெரிக்காவில் அட்டகாசம் செய்த இந்தியர்!

அமெரிக்காவில் ஊரடங்கு அமலில் உள்ளதை பயன்படுத்தி பொருட்களை அதிக விலைக்கு விற்ற இந்தியர் மீது மக்கள் புகார் அளித்துள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா தாக்கத்தால் உலக நாடுகள் பல முடங்கியுள்ள நிலையில் அமெரிக்காவிலும் பல மாகாணங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் கலிபொர்னியா மாகாணத்தில் மளிகைக்கடை நடத்தி வரும் ராஜ்விந்தர் சிங் என்பவர் ஊரடங்கை பயன்படுத்தி பொருட்களை அதிக விலைக்கு விற்றுள்ளார்.

பொருட்களின் தோராய விலையிலிருந்து சுமார் 200 மடங்கு விலையை அதிகமாக விற்றதாக பலர் ரசீதுடன் புகார் அளித்துள்ளனர். ராஜ்விந்தர்சிங் மீது அலமேடா கவுண்டி சுபீரியர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் ஓராண்டு வரை சிறை தண்டனையும், 10 ஆயிரம் டாலர் வரை அபராதமும் விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.