புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 30 ஜனவரி 2019 (16:18 IST)

உலக அளவில் ஊழல் செய்யும் நாடுகள் – இந்தியாவின் இடம் என்ன தெரியுமா ?

உலக அளவில் ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலை ஒரு தனனர்வத் தொண்டு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா 78-வது இடத்தில் உள்ளது.

வாட்ச்டாக் டிரான்ஸ்பேரன்ஸி இண்டர்நேஷனல் (watchdog Transparency International) என்ற சர்வதேச தன்னார்வ நிறுவனம் அரசு அலுவலகங்கள், பொது வணிக நிறுவனங்களில் நடைபெறும் ஊழலை அடிப்படையாகக் கொண்டு 180 நாடுகளை கணக்கில் கொண்டு உலகின் ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் சோமாலியா, தெற்கு சூடான், சிரியா ஆகிய நாடுகள் முதல் முன்று இடங்களைப் பிடித்துள்ளன. கடந்த முறை 81 ஆவது இடத்தில் இருந்த இந்தியா இம்முறை 3 இடங்கள் முன்னேறி 78 ஆவது இடத்தில் உள்ளது.

நமது அண்டை நாடுகளான சீனா 87 ஆவது இடத்திலும் பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், மற்றும் நேபாளம் ஆகியவை முறையே 117, 149, 124 ஆகிய இடங்களில் உள்ளன.

ஊழல் மிகக் குறைந்த நாடுகளின் பட்டியலில் டென்மார்க் மற்றும் நியூசிலாந்து ஆகிய  நாடுகள் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளன. இந்தப் பட்டியலில் அமெரிக்கா 22-வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.