பெரு நாட்டில் மக்கள் அவசர நிலையிலும் மீண்டும் போராட்டம்!
தென் அமெரிக்க நாடான பெருவில் மக்கள் மீண்டும் போராட்டம் குதித்துள்ளதால் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென் அமெரிக்க நாடான பெருவில் அதிபர் பெற்றோ காஸ்டிலோ. இவர் சமீபத்தில் தன் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
இவர் பதவி நீக்கம் செய்யப்படுவதற்கு முன்பு, பாராளுமன்றத்தைக் கலைத்தார். இதனால் அதிர்ச்சியடைந்த எம்பிக்கள், வாக்கெடுப்பினால், காஸ்டிலோவை பதவி நீக்கம் செய்தனர்.
இதனால், அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், அவசர நிலை அங்கு அமல்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், காஸ்டிலோ கைது செய்யப்பட்டதால் மீண்டும் அவரது ஆதரவாளர்கள் காஸ்டிலோவை விடுவிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதுசம்பந்தமமாக போராட்டக் காரர்கள் மற்றும் போலீஸுக்கு இடையே நடந்த மோதலில் 8 பேர் உயிரிழந்தனர். இடதனல மொத்த பலி எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.