செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 14 ஜூன் 2017 (13:05 IST)

விரைவில் மனிதர்கள் வேற்று கிரகவாசிகளை எதிர்கொள்ள நேரிடும்: அதிர்ச்சி தகவல்!!

வேற்று கிரகவாசிகள் என அழைக்கப்படும் ஏலியன் பற்றி பல செய்திகள் அவ்வப்போது வந்தாலும் ஏலியன் குறித்த தெளிவான செய்திகள் இன்னும் அறியப்படவில்லை.


 
 
வேற்று கிரகவாசிகள் என்ற இன்று இருப்பதாகவும், அவை பறக்கும் தட்டு மூலம் பூமிக்கு வந்து செல்வதாகவும் பல ஆதாரமற்ற தகவல்கள் நமது காதுகளில் விழுந்துக் கொண்டே தான் இருக்கிறது.
 
இந்நிலையில் இன்னும் 20 ஆண்டுகளில் வேற்று கிரகவாசிகளை மனிதர்கள் நேரில் கண்டறிய முடியும் என நிபுணர்கள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.
 
தற்போது பூமியை போன்று பல கிரகங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இவற்றில் வேற்று கிரகவாசிகள் வாழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக நம்பப்படுகிறது. 
 
ஆனால், இதுவும் எந்த அளவிற்கு உண்மை வாய்ந்தது என்பது கேள்விக்குறியே.