1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: புதன், 10 மே 2017 (22:34 IST)

ஆன்லைனில் ஹைடெக் திருமணங்கள்: குழந்தையும் ஆன்லைனிலேயே பிறக்குமோ?

ஒருகாலத்தில் திருமணம் என்றால் பத்து நாள் சடங்காக இருந்தது. அதன்பின்னர் காலப்போக்கில் மூன்று நாளாக குறைந்து தற்போது ஒரே நாளில் ரிசப்ஷன், திருமணம் இரண்டும் முடிந்துவிடுகிறது.



 


இந்த நிலையில் திருமணத்தின் அடுத்த பரிணாம வளர்ச்சியாக ஆன்லைனிலேயே திருமணம் செய்யும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. அழைப்பிதழ் தேவையில்லை, மண்டபம் தேவையில்லை, ஐயர் தேவையில்லை, சாப்பாடும் தேவையில்லை. ஒரே ஒரு லேப்டாப், இண்டர்நெட் போதும். திருமணம் முடிந்துவிடும்

மாப்பிள்ளையும் பொண்ணும் வெப் கேமிரா முன் திருமணம் செய்து கொள்ள அதை வீடியோ கான்ஃபிரன்ஸில் இருந்து நண்பர்கள் உறவினர்கள் வாழ்த்தும் திருமணங்கள் தற்போது வெளிநாட்டில் சகஜமாகிவிட்டது. சமிபத்தில் உபியை சேர்ந்த ஒருவர் விடுமுறை கிடைக்காததால் ஆன்லைனிலேயே சவுதியில் இருந்து திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இப்படியே போனால் கணவர் ஒரு இடத்தில் இருந்து விந்தணுவை அனுப்புவார், அதை மனைவி பெற்று கொண்டு குழந்தை பெற்றுக்கொள்ளும் சம்பவங்கள் விரைவில் நடக்க அதிக வாய்ப்பு இருப்பதாக சமூகநல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.