திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 25 ஆகஸ்ட் 2022 (15:27 IST)

ஒரே நேரத்தில் எச்.ஐ.வி., கொரோனா, குரங்கு அம்மை: மூன்று நோயால் பாதிக்கப்பட்ட நபர்

patient
ஒரே நேரத்தில் , கொரோனா வைரஸ் மற்றும் குரங்கு அம்மை ஆகிய மூன்று நோயால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
இத்தாலி நாட்டைச் சேர்ந்த 36 வயது நபர் ஒருவருக்கு சமீபத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவருக்கு குரங்கு அம்மை நோய் இருப்பதும் எச்ஐவி தொற்று இருப்பது கண்டறியப்பட்டது
 
சமீபத்தில் ஸ்பெயின் நாட்டிற்கு சென்று திரும்பிய அவருக்கு காய்ச்சல் தோல் அரிப்பு போன்ற அறிகுறிகள் இருந்ததால் ரத்த பரிசோதனை செய்யப்பட்டதில் இந்த மூன்று நோயும் இருப்பது தெரியவந்தது 
 
இந்த நிலையில் கொரோனா மற்றும் குரங்கு அம்மை நோய்களில் இருந்து குணமடைந்த அவர் தற்போது எச்ஐவி நோய்க்கு சிகிச்சை மேற்கொண்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் 
 
ஒரே நேரத்தில் மூன்று பெரிய நோய்கள் ஒரே நபருக்கு தோன்றியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது