செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 19 டிசம்பர் 2023 (08:20 IST)

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..! – 111 பேர் பரிதாப பலி! மீட்பு பணிகள் தீவிரம்!

சீனாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இதுவரை 111 பேர் பலியாகியுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள கன்சு மாகாணத்தில் உள்ள ஜிஷிகான் கவுண்டி பகுதியில் திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சீன மாகாண நிலநடுக்க நிவாரண தலைமையக செய்திபடி ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக இது பதிவாகியுள்ளது. ஆனால் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் இந்நிலநடுக்கம் 5.9 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.

கன்சு மாகாணத்தில் உள்ள செங்குவான்ஜென் பகுதியில் இருந்து 37 கி.மீ தொலைவில் இந்நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவு, கட்டிட இடிபாடுகளில் சிக்கி இதுவரை 111 பேர் பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Edit by Prasanth.K