திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 25 ஆகஸ்ட் 2023 (13:24 IST)

''Windows-க்கு பிறந்தநாள் வாழ்த்து''- பில்கேட்ஸ் டான்ஸ் ஆடிய வீடியோ வைரல்

Bill Gates
கணினி உலகில் மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை நடத்திக் காட்டியவர் பில்கேட்ஸ் இவர் விண்டோஸ் இயங்குதளத்தில் பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வரைகலைச் சூழல் இயங்குதளம் விண்டோஸ் ஆகும். மோக்டோசாப்ட் டாஸ் இயங்குதளத்தில் பொருத்தாக வரைகலைச் சூழலின் ஆர்வத்தால் இது வெளியிடப்பட்டதாகக் கூறப்பட்டுகிறது.

இதன் பிறந்த நாளை முன்னிட்டு உலகப் பெரும் பணக்காரர் பில்கேட்ஸ் தன் டுவிட்டர் பக்கத்தில், ‘’இதற்கு வாழ்த்து கூறி ஒரு பதிவிட்டுள்ளார். அதில், ''நீங்கள் எங்கு சென்றாலும் சில நினைவுகள் உடன் செல்லும், 28 ஆண்டுகளாக இணையத்தில் உங்களை  இணையதளத்தில் பின்தொடர்கிறார்கள் பிறந்தநாள் வாழ்த்துகள்’’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த விண்டோஸ் அறிமுகப்படுத்தியபோது, அவர் தன் நண்பர்களுடன் மேடையில்  மகிழ்ச்சியை வெளிப்படுத்தி ஆடிய வீடியோவையுவம் பகிர்ந்துள்ளார். இது வைரலாகி வருகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை உலகின் முன்னணி பணக்காரர்களின் பட்டியலில் முதலிடத்தில்  இருந்த நிலையில், தற்போது இளம் தலைமுறையினர்களான எலான் , ஜெப் பெகாஸ் உள்ளிட்டோர் தொழில் போட்டியிலுள்ளதால் பில்கேட்ஸ் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.