திருமணமாகாத பெண் கருவில் இயேசு: பரபரப்பு தகவல்


Abimukatheesh| Last Updated: வியாழன், 3 நவம்பர் 2016 (18:14 IST)
இயேசுநாதர் தனது வயிற்றில் குழந்தையாக இருக்கிறார் என்று அமெரிக்காவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கூறிவருவது பெரும் சர்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

 
அமெரிக்காவை சேர்ந்த ஹெய்லி(19) என்ற இளம்பெண் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன் தனது தாயாரிடம் தான் கர்ப்பமாக இருப்பதாகவும், தனது வயிற்றில் இயேசுநாதர் குழந்தையாக இருக்கிறார் என்றும் கூறியுள்ளார்.
 
திருமணம் ஆகாத தனது மகள் கர்ப்பமாக உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்த தாயார், மகளை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். பரிசோதனையில் அவர் கர்ப்பமாக இல்லை என்றும், வயிறு பெரிதாக உள்ளது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
இச்செய்தி அமெரிக்கா முழுவதும் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதைத்தொடர்ந்து தொலைக்காட்சிக்கு ஒன்றுக்கு பேட்டியளித்த அந்த இளம்பெண் கூறியதாவது:-
 
நான் கர்ப்பமாக இருப்பது உண்மைதான். விரைவில் இயேசுநாதருக்கு தாயாக போகிறேன் என்று தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :