சட்டவிரோத குடியேறிகளை உடனே வெளியேற்றுவேன்: அதிபராகவுள்ள ஃப்ரெட்ரி மெர்ஸ் பேட்டி..!
ஜெர்மனி அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள கன்சர்வேட்டிவ் கூட்டணியின் தலைவர் பிரதரிக் ஃப்ரெட்ரி மெர்ஸ் "சட்டவிரோத குடியேறியர்களை உடனே வெளியேற்றுவேன்" என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் சமீபத்தில் அதிபர் பொறுப்பேற்ற ட்ரம்ப், முதல் வேலையாக சட்டவிரோத குடியேறியவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்தியர்கள் உட்பட பலர் நாடுகடத்தப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ஜெர்மனி பொதுத் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. அந்த கூட்டணியின் தலைவர் ஃப்ரெட்ரி மெர்ஸ் , செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, "டிரம்ப் மாதிரியே, சட்டவிரோத குடியேறியவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுப்பேன். தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை பதவி ஏற்றவுடன் நிறைவேற்றுவேன்" என்று தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து, அமெரிக்காவைப் போலவே ஜெர்மனியிலும் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் உடனடியாக நாடுகடத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உலகம் முழுவதும், "சட்டவிரோத குடியேறியவர்களை வெளியேற்றும் நடவடிக்கையை அந்தந்த நாட்டின் அரசு எடுத்துக் கொள்ளும்" என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
Edited by Mahendran