செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 19 செப்டம்பர் 2017 (13:29 IST)

கல்லூரி வளாகத்தில் கத்தியுடன் நின்ற மாணவரை சுட்டுக்கொன்ற போலீஸார்

அமெரிக்காவில் கல்லூரி வளாகத்தில் கத்தியுடன் நின்ற மாணவரை போலீஸார் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
அமெரிக்காவின் ஜார்ஜியா தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் கார்கள் நிறுத்தும் இடத்தில் வாலிபர் ஒருவர் கையில் கத்தி மற்றும் துப்பாக்கியுடன் நின்றுள்ளார். அந்த பகுதியில் இருந்தவர் இதைக்கண்டு அதிர்ச்சியடைந்து பொலீஸுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அந்த வாலிபரிடம் துப்பாகி மற்றும் கத்தியை கையில் இருந்து கீழே போட்டுவிட்டு சரணடையும்படி கூறியுள்ளனர்.
 
ஆனால் அந்த வாலிபர் காவல்துறையினருக்கு கூறியதை கேட்கவில்லை. அதற்கு மாறாக அவர் என்னை சுடுங்கள், என்னை சுடுங்கள் என்று சத்தம்போட்டு கொண்டு காவல்துறையினரை நோக்கி முன்னேறி சென்றுள்ளார். இதனால் காவல்துறையினர் வேறுவழியின்றி அந்த வாலிபரை துபாக்கியால் சுட்டனர். 
 
இதில் படுகாயம் அடைந்த வாலிபரை காவல்துறையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்ததார். மேலும் விசாரணையில் இறந்த வாலிபர் கல்லூரியில் பொறியியல் படித்து வந்தார் என்பது தெரியவந்துள்ளது.