ஃபிடல் காஸ்ட்ரோ கிரீஸ் மக்களின் தைரியமான முடிவிற்கு வாழ்த்து


லெனின் அகத்தியநாடன்| Last Modified வியாழன், 9 ஜூலை 2015 (17:17 IST)
ஃபிடல் காஸ்ட்ரோ ’கிரீஸ் மக்களின் தைரியம் லத்தின் அமெரிக்க மற்றும் கரீபிய நாட்டு மக்களுக்கு பெரும் உத்வேகத்தை அளிப்பதாக உள்ளது’ எனக்கூறி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
 
 
சர்வதேச நிதி நிறுவனங்களுக்கு எதிரான போராட்டத்தில் மிகப்பெரிய அரசியல் வெற்றியைப் பெற்றுள்ள கிரேக்க அரசைப் பாராட்டுகிறேன் என்று கியூப புரட்சியின் நாயகன் ஃபிடல் காஸ்ட்ரோ தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.
 
இது குறித்து மேலும் அவர் கூறுகையில், ”சிக்கன நடவடிக்கை என்ற பெயரிலான மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிரான கிரீஸ் மக்களின் வாக்குகள் ஊக்கம் அளிக்கின்றன. கியூப மக்களுக்கு கிரீஸ் எப்பொழுதும் மிகவும் நெருக்கமான நாடாகும். கிரேக்கர்கள்தான் எங்களுக்கு கலை, அறிவியல், பழமைச் சின்னங்கள், தத்துவம் ஆகியவற்றைக் கொடுத்தார்கள். பள்ளிகளில் அதைத்தான் நாங்கள் படித்தோம்.
 
தற்போதைய சூழலில் கிரீஸ் மக்களின் இந்த தைரியம் லத்தின் அமெரிக்க மற்றும் கரீபிய நாட்டு மக்களுக்கு பெரும் உத்வேகத்தை அளிப்பதாக உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். ஃபிடல் காஸ்ட்ரோ கடந்த மூன்று மாதங்களுக்குப் பிறகு பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்வது இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
 


இதில் மேலும் படிக்கவும் :