செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 31 மார்ச் 2015 (12:47 IST)

பெண் வேடத்தில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு தலைமையகதிற்குள் நுழைய முயன்ற மர்ம நபர்கள்

பெண் வேடமணிந்து அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு மையத்திற்கள் நுழைய முயன்ற மர்ம நபர்களை பாதுகாப்பு அதிகாரிகள் சுட்டதில் ஒருவர் உயிரிழந்தார்.



 

 
அமெரிக்காவின் மேரிலேண்டில் உள்ள போர்ட் மேடெவில் அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு மையத்தின் தலைமையகம் உள்ளது. பலத்த பாதுகாப்பு பகுதியாக இது கருதப்படுகிறது.
 
இந்நிலையில், இரண்டு மர்ம நபர்கள் அதற்குள் நுழைய முயனறனர். அப்போது, பாதுகாப்பு அதிகாரிகள் அவர்கள் இருவரையும் துப்பாக்கியால் சுட்டனர்.
 
இதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானர். மற்றொருவர், குண்டு காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் பாதுகாப்பு அதிகாரி ஒருவருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது.
 
அவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மர்ம நபர்கள் இருவரும், பெண்கள் அணியும் உடையணிந்து, திருடப்பட்ட கார் ஒன்றில் வந்துள்ளனர். 
 
எதற்காக அந்த நபர்கள் பெண்கள் போல் உடையணிந்து வந்தார்கள் என்று தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்கள் வந்த வாகனத்தில் இருந்து, ஏராளமான போதை பொருட்களும், ஒரு துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது.
 
இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்க அதிகாரிகள் கூறுகையில், "இது உள்ளூர் குற்ற வழக்கு. இதை தீவிரவாத சம்பவமாகப் பார்க்கக்கூடாது" என்று கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.