1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 14 அக்டோபர் 2022 (10:55 IST)

மருமகளை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த 74 வயது மாமனார்: அதிர்ச்சி காரணம்!

gun
மருமகளை அவரது 74 வயது மாமனார் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
அமெரிக்காவில் வாழும் இந்தியரான சிதல் சிங் என்பவர் தனது மருமகள் தனது மகனை விவாகரத்து செய்வதாக கூறியதால் ஆத்திரமடைந்த தெரிகிறது. இதனை அடுத்து விவாகரத்து செய்ய வேண்டாம் என தனது மருமகளை அவர் சமாதானப்படுத்தி நிலையில் மருமகள் விவாகரத்து செய்வதில் உறுதியுடன் இருந்துள்ளார் 
 
இதனால் ஆத்திரமடைந்த சிதல் சிங், துப்பாக்கியை எடுத்து மருமகளை சுட்டுக் கொலை செய்துள்ளதாக தெரிகிறது. இதனை அடுத்து அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றார் 
 
முதல்கட்ட விசாரணையில் தனது மகனை மருமகள் விவாகரத்து செய்வதாக தெரிவித்து இருந்ததால் ஆத்திரத்தில் சுட்டுக் கொலை செய்ததாக அவர் கூறியுள்ளார்., இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
Edited by Siva