செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 27 பிப்ரவரி 2023 (08:17 IST)

ஈரோடு கிழக்கு தொகுதியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு.. ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள்..!

election
ஈரோடு கிழக்கு தொகுதியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு.. ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள்..!
ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் எந்த விதமான அசம்பாவிதமும் இதுவரை நிகழவில்லை என்றும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
 ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணியும் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் மற்றும் அதிமுக கூட்டணியின் வேட்பாளர் தென்னரசு ஆகிய இருவருக்கும் தான் உண்மையான போட்டி நடைபெறுகிறது.
 
இந்த இருவரில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை மார்ச் இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது தெரியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Siva