1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 22 ஜூலை 2022 (12:34 IST)

அடிச்ச வெயில்ல சிக்னலே உருகிட்டு...? - இங்கிலாந்தை வெளுக்கும் வெப்பம்!

light
இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் வெப்பம் வாட்டி வரும் நிலையில் அதீத வெப்பத்தினால் சிக்னல் கம்பமே உருகியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பிய நாடுகளான போர்ச்சுக்கல், ஸ்பெயின், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் கடந்த சில நாட்களாக கடும் வெப்ப அலை வீசி வருகிறது. ஸ்பெயின் உள்ளிட்ட சில பகுதிகளில் அதீத வெப்ப அலை காரணமாக காட்டுத்தீயும் ஏற்பட்டுள்ளது.
 
இந்நிலையில் வெப்ப அலை தாங்க முடியாமல் மக்கள் பலர் உயிரிழந்து வருவது அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களில் இங்கிலாந்து உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வெப்பம் தாளாமல் இறந்து விழுந்துள்ளனர். 
 
இங்கிலாந்தில் 40 டிகிரி செல்சியஸ் அளவு வெப்பநிலை பதிவாகி வரும் நிலையில் இங்கிலாந்தில் உள்ள ரயில்வே சிக்னல்கள் உருகியுள்ளன. இதனால் சிக்னல் தெரியாமல் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ரயில் சிக்னல் உருகி வழியும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.