ஈகுவெடார் அமேசான் காட்டில் விழுந்து நொறுங்கிய விமானம்: 22 பேர் உயிரிழப்பு
ஈகுவெடார் நாட்டில் ராணுவ விமானம் அமேசான் காட்டில் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த 22 பேரும் உயிரிழந்தனர்.
ஈகுவெடார் நாட்டில் ராணுவ விமானம் ஒன்று பெரு எல்லையில் உள்ள பாஸ்டாஷா மாகாணத்தில் இருந்து புறப்பட்டது.
பாராசூட்டில் இருந்து குதித்து பயிற்சி பெறுவதற்காக அவர்கள் விமானத்தில் சென்றனர். இந்த விமானம் அமேசான் காட் டின் மீது பறந் போது நிலைதடுமாறி திடீரென கீழே விழுந்து நொறுங்கியது.
இந்த விமான விபத்தில் அதில் பயணம் செய்த 22 பேரும் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிபர் ரபேல் கோரியா தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களுள் 19 ராணுவ வீரர்கள், 2 விமானிகள், ஒரு மெக்கானிக் ஆகியோர் அடங்குவர்.
இந்த விமான விபத்துக்கான காரணம் குறித்த தகவல்கள் எதுவும் வெளியகவில்லை.
இந்நிலையில், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.