வியாழன், 5 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 2 அக்டோபர் 2024 (14:56 IST)

இஸ்ரேலும் ஈரானும் பள்ளிக் குழந்தைகள் சண்டையிடுகிறார்கள்: டொனால்ட் டிரம்ப்

இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இரண்டு நாடுகளும் பள்ளி குழந்தைகள் போல சண்டையிடுகிறார்கள் என்று அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லெபனான் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஹிஸ்புல்லா தலைவர்கள் படுகொலையின் பின்னர், நேற்று நள்ளிரவில் ஈரான் தாக்கப்பட்டது. . இஸ்ரேல் மீதான தாக்குதலை ஈரான் தொடங்கிய நிலையில், இஸ்ரேல் அரசு பதிலடி தாக்குதலுக்கு தயாராகி வருகிறது.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது, "இஸ்ரேல்-ஈரான் இடையே நிலைமை மோசமாகி வருகிறது. இது நடந்தே தீரவேண்டும் என காத்திருந்தேன். ஈரான் இஸ்ரேல் மீது ராக்கெட்டுகள் தாக்குதல் நடத்தியுள்ளது, இது மோசமானது. பள்ளி குழந்தைகள் சண்டையிடுவது போலவே இது தெரிகிறது. என்ன நடக்கிறது என்று பார்க்க வேண்டும், அவர்கள் சண்டையிடட்டும், ஆனால் நிச்சயமாக இது ஒரு பயங்கரமான போர். மத்திய கிழக்கில் அமெரிக்கா தலையிட்டு போரை நிறுத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.

மேலும், "நான் அதிபராக இருந்த போது மத்திய கிழக்கில் போர் இல்லை, ஈரான் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால் தற்போது, அமெரிக்காவின் திறமையற்ற நபர்களால் மூன்றாம் உலகப்போரின் விளிம்பில் உள்ளதாகவே தெரிகிறது" என்றும் அவர் கூறினார்."


Edited by Mahendran