திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 4 ஆகஸ்ட் 2024 (12:46 IST)

முட்டையிலிருந்து கோழி வந்ததா? கொலையில் முடிந்த மதுப்பிரியர்களின் தத்துவ விவாதம்!

முட்டை முதலில் வந்ததா? கோழி முதலில் வந்ததா? என்ற விவாதத்தில் நண்பர் ஒருவரை சக நண்பரே குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

பல ஆண்டுகளாக மக்களிடையே விடை தெரியாத கேள்வியாக தொடர்ந்து வருபவற்றில் ஒன்று முட்டையிலிருந்து கோழி வந்ததா? கோழியிலிருந்து முட்டை வந்ததா? எது முதலில் வந்தது? என்ற கேள்வி. இதை பல பழைய தமிழ் படங்களில் பயன்படுத்தியிருப்பதை பார்க்க முடியும். தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் உலகம் முழுக்கவுமே இது ஒரு விடை தெரியாத கேள்வியாகவே இருந்து வருகிறது.

 

சமீபத்தில் இந்தோனேஷியாவில் மார்க்கஸ் மற்றும் டிஆர் என்ற இரு நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது அவர்கள் முட்டை சாப்பிட்டார்களோ என்னவோ, ஆனால் இந்த முட்டை, கோழி கேள்வி திடீரென அவர்கள் சிந்தையில் உதித்துள்ளது. நல்ல மது போதையில் முட்டை, கோழி இதில் எது முதலில் வந்தது என்ற தத்துவ விவாதத்தில் இருவரும் சீரியஸாக மூழ்கியுள்ளனர்.
 

 

ஒரு கட்டத்தில் மார்க்கஸ் உடனான விவாதத்தில் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற டிஆர் திடீரென அங்கிருந்த கத்தியை எடுத்து மார்க்கஸை குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார். முட்டை குறித்த விவாதத்தில் சக நண்பரையே குத்தி கொன்ற டிஆரின் செயல் இந்தோனேஷியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K