1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Dinesh
Last Updated : செவ்வாய், 23 ஆகஸ்ட் 2016 (10:29 IST)

ஒலிம்பிக்: பதக்கத்தை ஏன் கடிக்கிறார்கள் தெரியுமா?

ஒலிம்பிக்: பதக்கத்தை ஏன் கடிக்கிறார்கள் தெரியுமா?

ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்லும் வீரர் மற்றும் வீராங்கனைகள் பதக்கத்தை கடிக்கும் பழக்கத்தை வைத்துள்ளனர்.


 


அவர்கள் எதற்காக பதக்கத்தை கடிக்கிறார்கள் என்பது பலருக்கும் தெரியாது. தற்போதுள்ள வீரர், வீராங்கனைகள் புகைப்படத்திற்கு போஸ் கொடுப்பதற்காக பதக்கத்தை கடிக்கிறார்கள்.

ஆனால், அதற்கு உண்மையான காரணம் வேறு. ஒலிம்பிக்கின் ஆரம்ப காலத்தில், வீரர்கள், தாங்கள் வென்ற தங்க பதக்கம் உண்மையான தங்கம் தானா அல்லது கலப்பட மிக்க தங்க பதக்கமா என்பதை கண்டறிவதற்காகவே பதக்கங்களை கடித்து வந்தனர்.

தங்கத்தை கடிக்கும்போது பல்லில் ஒரு வித உள்ளீர்ப்பு விசை உணர்வை வைத்து உண்மையான தங்கத்தின் தரத்தை கண்டறிந்தனர். ஆனால் வீரர்கள் அதை மறந்து, புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்து வருகின்றனர்.

இது போன்று, 2010-ஆம் ஆண்டு நடத்த  ஒலிம்பிக்கில் உணர்ச்சிவசப்பட்டு பதக்கத்தை கடித்த ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஒலிம்பியன் டேவிட் மொலிலரின் பல் உடைந்து போனது குறிப்பிடத்தக்கது.