திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 21 பிப்ரவரி 2020 (12:01 IST)

2,200-ஐ தாண்டிய மரணங்கள்: கொரோனாவுக்கு முடிவே இல்லையா??

கொரோனா வைரஸ் தொற்றால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 2,200-ஐ கடந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.  
 
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தல்களை கொடுத்து வருகிறது. சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் உள்ள வுகானில் கடந்தாண்டு டிசம்பரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், அந்நாட்டை ஆட்டி படைத்து வருகிறது. 
 
சீனாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,236 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 74,576லிருந்து 75,465 ஆக அதிகரித்துள்ளது.