செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 8 ஆகஸ்ட் 2020 (08:29 IST)

நாளுக்கு நாள் கூடும் எண்ணிக்கை: 1,95,41,219 ஆக உலக பாதிப்பு!!

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,95,41,219 ஆக உயர்ந்துள்ளது. 
 
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை வெளியாகியுள்ளது. 

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,95,41,219 ஆகவும், வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,25,44,480 ஆகவும், வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,24,050 ஆகவும் உயர்ந்துள்ளது. 
 
இதில் அதிகபட்சமாக அமெரிக்காவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 50,95,524 ஆகவும், அந்நாட்டில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,64,094 ஆகவும் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.