1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 19 செப்டம்பர் 2022 (20:23 IST)

சீனாவில் தான் தைவான் உள்ளது: அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீன அமைச்சர்

சீனாவில் தான் தைவான் உள்ளது: அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீன அமைச்சர்
சீனாவில் தான் தைவான் உள்ளது என்றும் சீனாவை பிரிக்க முயற்சித்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அமெரிக்காவுக்கு சீன அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
தென் சீன கடல் பகுதியில் அமைந்துள்ள தைவான் நாட்டை சீனா தனது நாட்டின் ஒரு அங்கமாக இணைக்க முயற்சித்து வருகிறது. இந்த நிலையில் தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் குரல் கொடுத்து வருகின்றன
 
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு சீன வெளியுறவுத் துறை அமைச்சர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஒரே ஒரு சீனா தான் உள்ளது என்றும் அதில் தைவான் நாடும் ஒரு அங்கம் என்றும்  சீனாவை உடைக்க முயற்சிக்கும் எந்த நடவடிக்கையும் சகித்துக்கொள்ள முடியாது என்று சீனாவின் இறையாண்மையை பாதுகாக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்