போருக்குத் தயாராக இருங்கள்; ராணுவத்துக்கு சீன அதிபர் போட்ட உத்தரவால் பரபரப்பு!
போருக்கு தயாராக இருங்கள் என சீன ராணுவத்திற்கு அந்நாட்டு அதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தைவான் நாட்டை கைப்பற்ற சீனா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றும் சீனாவின் இந்த முயற்சிக்கு அமெரிக்கா உள்பட பல உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தைவானை ஆக்கிரமிக்க முயற்சி செய்தால் சீனாவுக்கு எதிராக போர் தொடுக்கவும் தயங்கமாட்டோம் என அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த நிலையில் சீனாவின் கூட்டு ராணுவ தலைமையகம் அமைந்துள்ள மத்திய ராணுவ ஆணையத்திற்கு நேரில் சென்ற சீன அதிபர் ஜின்பிங் போருக்கு தயாராக இருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளதாக ஆஸ்திரேலிய நாட்டின் பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது
நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு, வளர்ச்சி ஆகியவை உறுதிப்படுத்த சீன ராணுவம் தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளதாக அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது
தைவானுக்கு எதிரான போரைத்தான் மறைமுகமாக சீன அதிபர் அவ்வாறு கூறி உள்ளதாக கூறப்படும் நிலையில் தைவான் நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
Edited by Mahendran