செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 30 மே 2023 (21:37 IST)

2030-க்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப சீனா திட்டம்

china
விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் முன்னணியில் உள்ளன.

இந்த நிலையில்,  கடந்த சில ஆண்டுகளுக்கு சீனா நாடு சந்திரன், செவ்வாய் கோளுக்கு ரோவரை அனுப்பியது. இதையடுத்து கடந்த 2021 ஆம் ஆண்டு சீனாவும், ரஷியாவும் சர்வதேச சந்திரன் ஆராய்ச்சி நிலையத்தை அமைக்கும் திட்டத்தை அறிவித்தன.

இந்நிலையில், விண்வெளி ஆராய்ச்சியில் பல நாடுகள் இடையே போட்டி எழுந்துள்ள நிலையில், 2030 ஆம் ஆண்டிற்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளது.

இதை  நேற்று அந்த நாடு அறிவித்த நிலையில்,    நிலவில் மனிதர்களை தரையிறக்குவதும், நிலவினை ஆய்வு செய்வது, தொழில்நுட்ப பரிசோதனைகள் மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளது.