செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 23 பிப்ரவரி 2023 (13:24 IST)

புதுமண தம்பதிகளுக்கு 30 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை! – சீனா போட்ட பலே ப்ளான்!

China
சீனாவில் மக்கள் தொகையை அதிகரிக்க புதுமண தம்பதிகளுக்கு சம்பளத்துடன் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகள் முன்னர் வரை உலக மக்கள் தொகையில் அதிகமான மக்கள் தொகையை கொண்ட நாடாக சீனா இருந்து வந்தது. இதனால் சீனாவின் உற்பத்தி மற்றும் தேவைகள் வேகமாக அதிகரித்து வந்தது. இதனால் சீனா மக்கள் தொகையை கட்டுப்படுத்த கடுமையான சட்டங்களை இயற்றியது. அதன்படி சீனாவில் தம்பதியர் ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும், ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக் கொண்டால் சிறை தண்டனை உள்ளிட்ட கடுமையான சட்டத்திட்டங்களால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஆனால் எதிர்பார்த்தபடியே சீனாவில் மக்கள் தொகை குறைய தொடங்கியதால் தற்போது உலக மக்கள் தொகையில் சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது.

ஆனால் இவ்வாறாக வேகமாக குழந்தை பிறப்பை குறைத்த காரணத்தால் எதிர்காலத்தில் சீனாவில் இளைஞர்களின் எண்ணிக்கை வெகுவாக குறையும் என்றும், அதை தவிர்க்க அனைவரும் குறைந்த பட்சம் இரண்டு குழந்தைகளாகவது பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் சீனா உத்தரவிட்டுள்ளது.

அந்த வகையில் பிற நாட்டினர் பொறாமைப்படும் அளவிற்கு சீனாவின் கன்சு மற்றும் ஷான்சி ஆகிய மாகாணங்களில் புதிய முறை அமல்படுத்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி அம்மாகாணங்களில் திருமணம் செய்து கொள்ளும் புதுமண தம்பதிகளுக்கு ஊதியத்துடன் கூடிய 30 நாட்கள் விடுமுறையும் வழங்கப்பட உள்ளதாம். அவர்கள் எந்த மன உளைச்சலும் இல்லாமல் இருக்கவும், குழந்தையை பெற்றுக் கொள்ளவும் இது உதவும் என கூறப்படுகிறது.

Edit by Prasanth.K