திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 17 மார்ச் 2021 (11:43 IST)

எங்க நாட்டுக்கு வரணும்னா எங்க தடுப்பூசியைதான் போடணும்! – அடம்பிடிக்கும் சீனா!

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் சீனாவுக்கு செல்ல விசா வழங்க சீனா விதித்துள்ள கட்டுப்பாடு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் இருந்து வரும் நிலையில் பல நாடுகள் தடுப்பூசிகளை தங்கள் மக்களுக்கு செலுத்தி வருகிறது. இந்நிலையில் சீனாவும் மூன்று வகையான தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்தி வருவதுடன் கம்போடியா உள்ளிட்ட நாடுகளுக்கும் விநியோகித்து வருகிறது.

இந்நிலையில் இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து சீனாவுக்கு செல்ல விசா விண்ணப்பிக்கும் நபர்களுக்கு சீன தூதரகம் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி சீன தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டால் மட்டுமே சீனா செல்ல விசா வழங்க முடியும் என கூறப்பட்டுள்ளது.