1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 15 செப்டம்பர் 2018 (14:00 IST)

சீனா - ரஷ்யா திடீர் இணக்கம்: அமெரிக்கா கலக்கம்!

ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள சைபீரியா மாகாணத்தின் கிழக்கு பகுதியில் ரஷ்யா - சீனா இணைந்து கூட்டுப்பயிற்சியில் ஈடுப்பட்டுள்ளனர். இந்த கூட்டுப்பயிற்சி வோஸ்டாக் 2018 என்ற பெயரில் நடத்தப்பட்டு வருகிறது. 
 
ரஷ்யாவை சேர்ந்த 3 லட்சத்துக்கும் அதிகமான ராணுவ வீரர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர். ஆனால், இந்த பயிற்சியில் சீனா பங்கேற்றுள்ளது தற்போது உலக நாடுகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
இவ்விரு நாடுகளின் கூட்டுப்பயிற்சி அமெரிக்காவுக்கு பதிலடியாக இருந்தாலும், சீனா மற்றும் ரஷ்யா இணைந்து உலக நாடுகளுக்கு தங்கள் பலத்தை நிரூபிக்கும் வகையில் செயல்படுவதாக கருத்துக்கள் வெளியாகிறது. 
 
அதிலும் ஐரோப்பிய பிரதிநிதி ஒருவர் இது குறித்து கூறியது பின்வருமாறு, சமீபத்திய ஆண்டுகளாக ரஷ்யா, சீனா இடையே பாதுகாப்பு சார்ந்து ஒத்துழைப்புகள் அதிகரித்து வருவது சிறிய நாடுகளை பதற்றமடைய செய்துள்ளன என தெரிவித்துள்ளார்.