1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 14 ஜூலை 2022 (13:28 IST)

கார் ஏசி.. கக்கூஸ் ஏசி.. ஏசியோ ஏசி..! – கோத்தபய மாளிகை சிறுவன் ரிவ்யூ!

Rajapaksa
இலங்கையில் போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை கைப்பற்றியுள்ள நிலையில் அதை சுற்றி பார்த்த சிறுவன் அளித்த ரிவ்யூ வைரலாகி வருகிறது.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. இதனால் போராட்டக்காரர்கள் இலங்கை அதிபர் மாளிகையை சூறையாடிய நிலையில், அங்கிருந்து தப்பிய அதிபர் கோத்தாபய ராஜபக்சே தலைமறைவானார்.

இந்நிலையில் போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையில் நீச்சல் குளத்தில் குளிப்பதும், படுக்கையறையில் விளையாடுவதுமாக வெளியிடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. மக்கள் பலரும் ராஜபக்சே மாளிகையின் ஆடம்பரத்தை கண்டு வியந்துள்ளனர்.

பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் அதிபர் மாளிகையை சுற்றி பார்க்க வந்த வண்ணம் உள்ளனர். அப்படியாக சுற்றி பார்க்க வந்த சிறுவன் ஒருவன் பேசிய வீடியோ வைரலாகியுள்ளது. அதில் அந்த சிறுவன் “இங்க வந்து பார்த்தோம். எல்லாம் பிரம்மாண்டமாக இருக்கு. ஏசி, டிவி எல்லாம் இருக்கு. எங்க மாமா சொன்னார் கக்கூஸ்ல கூட ஏசி போட்டிருக்குன்னு. இதையெல்லாம் பாக்கும்போது இப்படியெல்லாம் வாழ்ந்துட்டு ஓடிட்டானேன்னு இருக்கு” என பேசியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.