ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 28 பிப்ரவரி 2022 (15:26 IST)

ரஷ்யாவுக்கு எதிராக போரிட கைதிகள் விடுதலை! – உக்ரைன் அதிபர்!

ரஷ்யாவுக்கு எதிராக போராட உக்ரைன் தீவிரம் காட்டி வரும் நிலையில் தேவைப்பட்டால் கைதிகளை விடுவிக்க உள்ளதாக உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்துள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உக்ரைனில் பல நாட்டு மக்களும் சிக்கியுள்ள நிலையில் பலர் அண்டை நாடுகளான லிதுவேனியா, லாட்வியா, பெலாரஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு தப்பி சென்று அங்கிருந்து சொந்த நாடுகளுக்கு செல்கின்றனர்.

இந்நிலையில் உக்ரைனில் ரஷ்யா நடத்திய போரில் இதுவரை 4,500 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார். மேலும் ராணுவத்தில் பணியாற்றிய அனுபவம் உள்ள சிறைக்கைதிகள் ரஷ்யாவுக்கு எதிராக போரிட விரும்பினால் அவர்களை விடுதலை செய்வதாகவும் செலன்ஸ்கி அறிவித்துள்ளார்.