செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வெள்ளி, 6 ஜனவரி 2017 (15:42 IST)

ஹாலிவுட் பாணியில் காரை வீட்டு கூரை மீது ஏற்றிய திருடன்

அமெரிக்காவின் கலிபோர்னியாவில், ஹாலிவுட் படம் பாணியில் காரை ஓட்டி வந்த வேகத்தில் வீட்டின் கூரை மீது ஏற்றிய திருடனுக்கு கால் முறிவு ஏற்பட்டது.


 

 
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள பிரெஸ்னோ பகுதியை சேர்ந்த பெஞ்சமின் தக்கர்(25) என்பவர் கார் திருடன். சம்பவத்தன்று இவர் கார் இன்றை வேகமாக ஓட்டி வந்தார். அதே வேகத்தில் கார் ஒரு வீட்டின் கூறை மீது ஏறியது. 
 
வீட்டின் உரிமையாளர் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டுகே வெளியே வந்து பார்த்தபோது தனது வீட்டின் மீது கார் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிந்து சத்தம் போட்டுள்ளார். சத்தம் கேட்ட திருடன் கூரையிலிருந்து கீழூ குதித்துள்ளான். அதில் அவர் கால் முறிந்தது.
 
தப்பியோடிய திருடன் தனது காதலி வீட்டில் தலைமறைவாக இருந்து வந்துள்ளார். பின்னர் காவல்துறையினர் அந்த கார் திருடனை கைது செய்தனர்.