சைக்கிள் மோதி கார் டேமேஜ் ஆகுமா? ஆகும் பாஸ்.. ப்ரூஃப் இருக்குல எங்ககிட்ட
சைக்கிள் மோதி கார் டேமேஜ் ஆகும்ன்னு சொன்னா நம்புவீங்களா ஆனா நீங்க நம்பித்தான் ஆகனும் ஏனா இப்படி ஒரு சம்பவம் சீனாவில் நடந்துள்ளது.
ஆம், சைக்கிள் மோதி காரின் முன் பக்க பம்பர் டேமேஜ் ஆகியுள்ள சம்பவம் சீனாவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த புகைப்படமும், வீடியோவும் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
புகைப்படத்தை பார்த்து இது போலியாக உருவாக்கப்பட்ட புகைப்படம் என்று நினைக்க வேண்டாம் உண்மையில் சைக்கிள் மோதி காருக்கு பயங்கர டேமேஜ். இந்த விபத்தில் சைக்கிள் ஓட்டியவருக்கு சிறு காயம், கார் ஓட்டியவருக்கு எந்த காயமும் இல்லை.