செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 15 நவம்பர் 2023 (12:27 IST)

காரும் விமானமும் நேருக்கு நேர் மோதி விபத்து.. கார் ஓட்டுனர் படுகாயம்..!

அமெரிக்காவில் காரும் விமானமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான நிலையில் கார் டிரைவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
அமெரிக்காவில் சாலையில் சென்ற கார் மீது திடீரென விமானம் மோதியது. டெக்ஸாஸில் உள்ள மிட்லாண்ட் என்ற இடத்திலிருந்து வந்த சிறிய ரக விமானம் திடீரென அவசரமாக தரையிறங்க முயன்றதாகவும், சாலையில் விமானம் தரையிறங்கிய போது எதிரே வந்த காரின் மீது பயங்கரமாக மோதியதாகவும் தெரிகிறது 
 
கார் மற்றும் விமானம் நேருக்கு நேர் மோதிய இந்த விபத்தில் கார் ஓட்டுநர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்துக்கான காரணம் குறித்து விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருவதாகவும் சிறிய ரக விமானத்தை ஓட்டிய பயிலட்டிடம் விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran