திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 17 நவம்பர் 2024 (13:47 IST)

போன வாரம் கார் விபத்து.. இப்போ கத்திக்குத்து! மீண்டும் சாலையில் பிணங்கள்! - அடுத்தடுத்து சீனாவில் அதிர்ச்சி!

China death

சீனாவில் கல்வி நிறுவனத்தில் திடீரென வாலிபர் ஒருவர் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் 8 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் வுக்ஸி நகரத்தில் கல்வி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த கல்வி நிறுவனத்தில் படித்து வந்த 21 வயது வாலிபர் ஒருவர் திடீரென கத்தியை எடுத்து கண்ணில் பட்டவர்களை எல்லாம் சரமாரியாக குத்தி தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.

 

இளைஞரின் கோர தாக்குதலில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில் 17 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு விரைந்து சென்ற போலீஸார் இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

 

கடந்த வாரம் ஜூஹாய் நகரில் உள்ள விளையாட்டு மையத்தில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தவர்களை பெண் ஒருவர் கார் ஏற்றிக் கொன்றதில் 35 பேர் பலியானார்கள். அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கும் மீண்டும் ஒரு கோர சம்பவம் சீனாவில் அரங்கேறியுள்ளது.

 

Edit by Prasanth.K