1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 17 ஜனவரி 2018 (12:28 IST)

பாலம் இடிந்து விழுந்ததில் 9 கட்டுமான தொழிலாளர்கள் பலி

கொலம்பியாவில் பாலத்தின் ஒரு பகுதி கட்டி முடிக்கப்பட்டிருந்த நிலையில், பாலம் திடீரென இடிந்து விழுந்ததில் கட்டுமான தொழிலாளர்கள் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அமெரிக்க மாகாணம் கொலம்பியாவில் சிரஜாரா என்ற இடத்தில் தலைநகர் பகோட்டாவையும், வில்லாவிசென்சியோ நகரையும் இணைக்கும் வகையில் 450 மீட்டர் நீளம் கொண்ட ஒரு பாலம் கட்டப்பட்டு வந்தது. இந்தப் பாலத்தின் ஒரு பகுதி கட்டி முடிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென பாலம் இடிந்து விழுந்தது அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த கட்டுமான தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி அலறினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த  மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். ஆனால் விபத்தில் 9 கட்டுமான தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
போலீஸார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்நாட்டு போக்குவரத்து துறை அமைச்சர் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த கோர சம்பவத்தால் அப்பகுதியே சோக மயமாக காணப்பட்டது.