1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 23 செப்டம்பர் 2022 (22:28 IST)

புக்கர் விருது பெற்ற எழுத்தாளர் மறைவு

mantal
இலக்கிய உலகில்  நோபல் பரிசுக்கு அடுத்து உயரிய விருதாகக் கருதப்படுவது புக்கர் விருது. இந்த விருது பெற்ற பிரிட்டிஷ் எழுத்தாளர் இன்று காலமானார்.

ஆங்கில இலக்கிய உலகில்  நீண்ட காலம் எழுத்தாளராகப் பணியாற்றிச் சாதனை புரிந்தவர் பிரிட்டிஷ் எழுத்தாளர் ஹிலாரி மாண்டல். இவரது எழுத்திற்கு என தனி வாசகர்கள் பட்டாளம் உண்டு.

இவர் எழுதிய வுல்ஃப் ஹால் அதிகளவில் விற்பனையாகும் புத்தகம் ஆகும். இப்புத்தக ஆசிரியரான வுல்ஃப் ஹால் இன்று தன் 70 வயதில் காலமானதை இப்புத்தக பதிப்பாளர் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த ஆங்கில நாவலாசிரியர்களில் ஒருவர் மாண்டல். அவரது நாவல்கள் கிளாசிக்குகள் என்று தெரிவித்துள்ளார்.