வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 27 ஏப்ரல் 2019 (08:55 IST)

கோட்டைவிட்ட இலங்கை அரசு: மீண்டும் குண்டுவெடிப்பு: 15 பேர் பலி

இலங்கையில் நேற்று இரவு மீண்டும் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 15 பேர் உயிரிழப்பு என தகவல் வெளியாகியுள்ளது. 
 
இலங்கையில் கடந்த ஞாயிறு அன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டத்தின் போது வெவ்வேறு பகுதிகளில் மனித வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. தாக்குதலுக்கு இதுவரை பலர் உயிர் இழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  
 
இந்த விபத்தை தொடர்ந்து இலங்கை அரசு நாடுக் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுப்பட்டு, அங்காங்கே வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகளை கண்டுபிடித்து அழித்து வந்தது. மேலும், இந்த தாக்குதலுக்கு தொடர்புள்ளவர்களை தேடியும் வந்தது. 
தொடர் குண்டுவெடிப்புகளை தொடர்ந்து இலங்கையில் நாடு முழுவதும் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. ஐஎஸ் தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்பட்ட இருவர் இலங்கை ராணுவத்தால் சுட்டுக்கொள்ளப்பட்டனர். 
 
இந்நிலையில், இவ்வளவு கவனமாக செயல்பட்டும், இலங்கையில் நேற்று இரவு குண்டுவெடிப்பு நடந்துள்ளது. கல்முனை என்னும் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இந்த குண்டுவெடிப்பு நடந்துள்ளது. அந்த வீட்டில் பதுங்கியிருந்து 4 மனித வெடிகுண்டுகளோடு சேர்ந்து மொத்தம் 15 பேர் பலியாகியுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.