ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்து...
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் இன்று ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று வானில் சென்று கொண்டிருந்தது. அதில் பயணித்த இரு விமானிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள ரியாசி மாவட்ட பகுதியில் ஹெலிகாப்டர் பறந்து கொண்டிருந்தது.
அப்போது, விமானியின் கட்டுப்பாட்டை இழந்து ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானிகள் உயிர் தப்பினர். இதுகுறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.