புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 31 மார்ச் 2020 (16:54 IST)

2 லட்சம் மனித உயிரை கொரோனாவுக்கு பலி கொடுக்கும் அமெரிக்கா!

கொரோனாவால் அமெரிக்காவில் 2 லட்சம் பேர் உயிரிழக்க வாய்ப்பு என வெள்ளை மாளிகை எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
உலகம் முழுவதும் கொரோனா பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38,092 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் 7,89,240 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 1,66,506 பேர் குணமடைந்துள்ளனர்.  
 
இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகளை தொடர்ந்து அமெரிக்கா அதிக கொரோனா உயிரிழப்புகளை சந்தித்து வருகிறது. இந்தியாவிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. 
 
இந்நிலையில், கொரோனா வைரஸ் அமெரிக்காவில் 2 லட்சம் உயிர்களை பலிகொள்ள வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு எதிராக அமெரிக்கா சிறப்பாக செயல்ப்பட்டாலும் அதிக உயிர் இழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதேபோல சுகாதார நெருக்கடியில் நாடு விரைவில் மீள்வதும் அதிசயமே என தெரிவிக்கப்பட்டுள்ளது.